போலந்தில் 45 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் (சுமார் 148 அடி) கொண்டு டீப்ஸ்பாட், உலகின் ஆழமான நீச்சல் குளமாக கட்டப்பட்டுள்ளது. இதில் 8,000 கன மீட்டர் நீர் உள்ளது. மேலும் நீந்துவோருக்கு ஒரு பயிற்சி தளமாக கருதப்படுகிறது. இது உருவாக்க 10.6 மில்லியன் டாலர் செலவாகி உள்ளது. கட்டுமானம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியது.
நீச்சல் குளத்தின் ஆழமான இடத்தில் உருவகப்படுத்தப்பட்ட "நீல துளை" பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறிய கப்பல் அத்துடன் செயற்கை குகைகள் மற்றும் டைவர்ஸ் ஆராய மாயன் இடிபாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

போலந்தில் கடுமையான கோவிட் -19 விதிகள் இருந்தபோதிலும் டீப்ஸ்பாட் திறக்க அனுமதிக்கப்படும், ஏனெனில் இது ஒரு பயிற்சி மையமாகும்.