கர்ப்பிணிப் பெண்களுக்கு காபியில் இருக்கும் ஆபத்துகள் - ஓர் ஆய்வு !



தேநீர் (அ) காபி குடித்தல் அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். ஆனால் , கர்ப்பிணி பெண்களுக்கும் காபி அருந்தும் பழக்கத்திற்கும் சம்மந்தம் உள்ளது என்றல் நம்மால் நம்ப முடிகிறதா ?


இந்த கூற்றை அறிஞர்கள் தங்களின் பார்வைகளில் ஆராய்ந்து கூறியுள்ளனர்.


நாள் ஒன்றுக்கு 200 மில்லி கிராம் அல்லது அதற்கும் குறைவான அளவு கேஃபைன் எடுத்துக்கொள்வது, கருச்சிதைவு அல்லது கருவில் இருக்கும் போது குழந்தை சரியாக வளர்வது தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எவ்வளவு கேஃபைன் உட்கொள்கிறார்கள் என்பதை கணக்கிடும் தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன.


ஐஸ்லாந்தின் ரேக்ஜவிக் பல்கலைக்கழகத்தின் உளவலியலாளர் பேராசிரியர் ஜேக் ஜேம்ஸ், "இந்த ஆய்வு கண்காணிப்பில் எடுக்கப்பட்டது என்றும் கர்ப்ப காலத்தில் கேஃபைன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பதை நிச்சயமாக நிரூபிக்க முடியாது.ஆனால், ஆய்வுபடி, கர்ப்பிணி பெண்கள் தேநீர் அல்லது காஃபி பருகுவதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது" என கூறுகிறார் .


கேஃபைன் எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்தலாம் என்றும் ஆனால் கர்ப்பத்தின்போது இதனை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது கிடையாது என பிரிட்டன் சுகாதார சேவை, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் கல்லூரிகளின் மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இந்த ஆய்வறிக்கையில் அதிக எச்சரிக்கை இருப்பதாகவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லையென்றும் ஆஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகத்தின் மருந்தாளரான மருத்துவர் லூக் தெரிவிக்கிறார்.


"கர்ப்பமாக இருக்கும்போது எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம்விட முக்கியம் அவர்களுக்கு பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கேஃபைன் எடுத்துக்கொள்ளலாம் என்பதை புரியவைக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.


Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios