
கொரோனா இறப்பு விகித கணக்கெடுப்பில் , 50 சதவிகிதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிய வருகிறது. மேலும், கொரோனா உயிரிழப்புகளில், 37 சதவிகிதம் பேர் 45 முதல் 60-வயதுக்குள் உள்ளவர்கள் குறிப்பாக , 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம்.
பிரதமர் மோடி, கொரோனா நோய் குறித்து நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய போது முக்கியமாகச் சொன்ன விஷயங்களுள் ஒன்று…
கொரோனாவின் பிறப்பிடமான வூகானிலும் 60 வயதுக்கு மேற்பட்டோர்தான் கொரோனாவால் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதைத் தரவுகள் நமக்குச் சொல்கின்றன. எனவே, கொரோனா முதியவர்களுக்குச் சற்றே ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகின்றன இந்தத் தரவுகள்.
காலையில் , பகல் நேரத்தில் கடைகளுக்குச் செல்வது, மாலை நேரத்தில் பூங்காக்களுக்குச் சென்று அக்கம்பக்க நண்பர்களுடன் கதையாடுவது… இவைல்லாம்தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முதியவர்களின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இன்னும் சில முதியவர்கள் 80 வயதுக்கு மேலும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் முட்டு கட்டையாகி விட்டது , இந்தக் கொரோனா.