• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பிளாஸ்டிக்கு பதில் வெள்ளரித் தோல்


இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி), கரக்பூர் வெள்ளரி தோல்களிலிருந்து உணவு பேக்கேஜிங் பொருளை தயாரிக்க உள்ளது.




பிளாஸ்டிக் பயன்பாடு நுகர்வோரால் தவிர்க்கப்படுகின்ற அதே வேளையில், அவை உணவு பேக்கேஜிங் பொருட்களாகப் புழக்கத்தில் உள்ளன, என்று ஐ.ஐ.டி கரக்பூர் உதவி பேராசிரியர் ஜெய்தா மித்ரா கூறினார்.

மேலும் அவர் வெள்ளரிக்காயில் செல்லுலோஸ் நிறைந்துள்ளது, என்றார்.







ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளைப் பற்றி பேசிய மித்ரா, "வெள்ளரி தோள்களில் செல்லுலோஸ், நானோகிரிஸ்டல்கள் மற்றும் ஹைட்ராக்சைல் குழுக்கள் ஏராளமாக இருப்பதால் சிறந்த மக்கும் பேக்கேஜ்களை அதனைக் கொண்டு உருவாக்க முடியும்.


உணவு பேக்கேஜிங் மற்றும் குளிர்பானத் தொழில்களைத் தவிர, தெர்மோ-ரிவர்சிபிள் மற்றும் காகிதம் தயாரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு குறித்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios