• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பயிர் கடன் ரூ2562 கோடி

இந்த ஆண்டு ரூ2562 கோடி பயிர் கடனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி



கூட்டுறவுத் துறையின் மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான பயிர்க்கடன் மற்றும்

இடு பொருட்கள் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,

வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக டெல்டா மாவட்டத்தில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

டெல்டா விவசாயிகளுக்கு கேட்டவுடன் உடனடியாக கடன் கிடைக்க வழி வகை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது..


இந்த ஆண்டு ரூ2562 கோடி பயிர் கடனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

7 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios