முதலைகள் அதிகமாக அமெரிக்க, ஆப்பிரிக்க, மற்றும் ஆசிய என பல நாடுகளில் ஆறுகளிலும், குளங்களிலும் காணப்படும். பெரிய பற்களுடன் இருக்கும் என நாம் அனைவரும் புகைப்படத்தில் பார்த்திருப்போம் எனினும் முதலையை நேரில் பார்த்தவர்கள் சிலர் மட்டுமே!

முதலையின் பற்கள் பெரிதாக இருக்கும் மேலும் அதன் தோள்களும் கரடு முரடான அமைப்பை பெற்றிக்கும்.இந்த முதலைகள் மான், மாடுகள் மட்டுமல்லாது சிங்கம் புலிபோன்றவற்றை வீழ்த்தி விடும்.மனிதர்களையும் கொன்று விடும் தன்மை கொண்டது தான் முதலை என்பது அனைவரும் அறிந்திருப்போம்.
ஒரு சின்ன நாய் குட்டி ஒன்று அமைதியாக படுத்து கிடக்கும் முதலையை பார்த்து குரைக்கிறது. இந்த திடீர் சத்தத்தை கேட்ட முதலையை அத்தகைய பலம் கொண்ட முதலையை துளி கூட பயம் இல்லாமல் ஒரு சின்ன நாய் துணிச்சலோடு துரத்தி செல்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.