• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

முதலையிடம் உள்ள திறன்

ஒரு சமீபத்திய ஆய்வில், இளம் முதலைகளின் வால் பகுதி முக்கால் அடி அல்லது அவற்றின் மொத்த உடல் நீளத்தின் 18 சதவிகிதம் வரை மீண்டும் வளரும் என்று தெரியவந்துள்ளது.

பல்லிகளை போன்று முதலைகளுக்கும் இந்த திறன் இருப்பதாக தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் லூசியானா வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்தி உடற்கூறியல் மற்றும் திசு அமைப்பைப் படிப்பதற்கான நிரூபிக்கப்பட்ட முறைகளுடன் முதலைகளின் மீண்டும் வளர்ந்த வால்களின் கட்டமைப்பை ஆய்வு செய்தது. இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டு சிக்கலான கட்டமைப்பாக வால்கள் உள்ளதாக விஞ்ஞானிகளின் குழு கண்டுபிடித்துள்ளது.மீண்டும் வளரும் வால்கள் முதலைகளுக்கு நன்மையை அளிக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios