இந்தியாவில் உள்ள பசு நல அமைப்பான ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் (ஆர்.கே.ஏ), இந்தியாவின் முதல் நாடு தழுவிய ஆன்லைன் தேர்வை நடத்த உள்ளது. ‘கௌ விஜியன்’ (மாடு அறிவியல்) குறித்து பிப்ரவரி 25 அன்று இந்த தேர்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆன்லைன் தேர்வு அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக இருக்கும்.

இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும். தேர்வை நிர்வகிக்கும் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இது 4 நிலைகளில் நடத்தப்படும் என்று கூறியது. 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு முதன்மை நிலை. பின்னர் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் நிலை, கல்லூரி மூன்றாம் நிலை, நான்காம் நிலை பொது மக்களுக்கானது. தேர்வு எழுதிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றிகரமான தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.