உலகையே உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தற்பொழுது இரண்டாவது அலையாக அதாவது உருமாறிய கொரானாவாக பரவி வருகிறது. முக்கியமாக இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் 2020 பரவ தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்பொழுது 83 நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசலால் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய உலக சுகாதார மையத்தையே நகைச்சுவை கலந்த அதிரிச்சியில் ஆழ்த்தியுள்ளது ஸ்பெயினில் நடந்த இந்த நிகழ்வு.
வயசானா லவ் வரக்கூடாதா என்ன???
ஸ்பெயினின் மேட்ரிட் என்ற நகரில், 73 வயதான முதியவர் பெர்னாண்டோ மற்றும் 62 வயதான ரோசரியோ இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே நகரில் உள்ள மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த ஒரு சூழ்நிலையிலும் கூட இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. டிஸ்சார்ஜ் ஆகி போனால் திருமணம் செய்ய முடியுமோ என்னவோ என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காதலுக்கு நோய் கூட ஒரு தடையே இல்லை!!
சிகிச்சை பெற்று கொண்டே காதல் செய்த இவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காதலுக்கு கண் இல்லை என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த நிகழ்வு,காதலுக்கு வயது மட்டுமில்லாமல், நோய் கூட ஒரு தடையே இல்லை என்று காதல் திருமணம் செய்து அசத்தியுள்ளனர் ஸ்பெயினை சேர்ந்த பெர்னாண்டோ(73) மற்றும் ரோசரியோ(62) தம்பதியினர்.