நூற்றுக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கும் ஒரு மருத்துவமனைக்கு வெளியே “கோவிட் ஒரு கட்டுகதை” என்று சிலர் கூச்சலிடும் வீடியோவை வெளியிட்ட ஒரு ஜூனியர் மருத்துவர் மனம் நொந்து பேசியுள்ளார். லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று அவர் எடுத்த காட்சிகளை மத்தேயு லீ டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு இத்தகைய கருத்துகளைத் தெரிவித்தார்.
பெரிய குழுக்களாக நூற்றுக்கணக்கான மக்கள் முகமூடி அணியாமல், குடிபோதையில் 'கோவிட் ஒரு புரளி' என்று கூச்சலிடுகிறார்கள். அதாவது நூற்றுக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டிருக்கும் கட்டிடத்திற்கு வெளியே இத்தகைய சம்பவம் நடைப்பெற்றது.

"இந்த தொற்றுநோயின் தீவிரத்தை மக்கள் ஏன் இன்னும் உணரவில்லை?" "மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் செய்யும் தியாகங்களையும் உயிரிழப்புகளையும் மக்கள் நேரடியாக காண விரும்புகிறேன், என்கிறார் மத்தேயு லீ.