தானாய் இயங்கி பொருட்களை விநியோகம் செய்யும் நியூரோவின் விலை 5 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பம் போன்ற முதலீட்டாளர்களுக்கு இன்னும் இதன் விலையை அதிகரிக்க எண்ணம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

முன்னாள் கூகிள் பொறியாளர்களான டேவ் பெர்குசன் மற்றும் ஜியாஜுன் ஜு ஆகியோரால் ஜூன் 2016 இல் நியூரோ நிறுவப்பட்டது. இதுவரை முதலீட்டாளர்களை ஈர்க்க நியூரோ ஒருபோதும் சிரமப்படவில்லை. நியூரோ மக்களை கொண்டு செல்வது அல்ல, பொருட்களைக் கொண்டு செல்லும் குறைந்த வேக மின்சார சுய-ஓட்டுநர் வாகனம் ஆகும்.
இப்பொழுது இந்த நிறுவனம் R2 என அழைக்கப்படும் இரண்டாவது தலைமுறை வாகனத்தை உருவாக்கியுள்ளது. இது உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் பிற வணிகங்களுக்கான உள்ளூர் விநியோக சேவைக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வாகனம் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றது. அரிசோனா, கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில் உள்ள பொது சாலைகளில் நியூரோ இயங்கி வருகிறது.