• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

திருச்சியில் வணிகர் சங்க பிரமுகருக்கு கரோனோ தொற்று....

மிழகம் முழுவதும் முக்கிய பிரபலங்கள் பலரும் கரோனோ நோய் தொற்றினால் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.



திருச்சியில் வியாபாரிகள் சங்க முக்கிய பிரமுகருக்கும் கரோனோ நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது உறுதியானவுடன் திருச்சி காவிரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சியில் உள்ள முக்கிய வியாபாரிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர். 


காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை


திருச்சியில் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறப்பது தொடர்பாக கடந்த 7-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அவருடன் கலந்துகொண்ட அனைத்து வியாபாரிகளுக்கும் நாளை (15-ம் தேதி) திருச்சி தேவர் ஹாலில் கரோனா பரிசோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக காந்தி சந்தை தொடர்பான பிரச்சனையில் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களுடன் தினமும் தொடர்பிலே இருந்த அந்த வியாபாரிகள் சங்க பிரமுகருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது மீடியாக்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios