• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

எல்லாரும் அந்தமானுக்கு போலாம் வாங்க - கொரோனா இல்லாத யூனியனாக மாறிய அந்தமான்!!!

2019 டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள ஊஹானில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகில் அனைத்து மூலைகளிலும் பரவிக்கொண்டிருந்தது. இந்நிலையில் 2020 டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.


தற்போதைய சூழலில் இந்த புதிய வகை கொரோனா , இந்தியா உள்பட 82 நாடுகளில் பரவி உள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனது கோரமுகத்தை காட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து சாமர்த்தியமாக விலகியுள்ளது அந்தமான்.


அந்தமானில் மொத்தமாக 4994 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 4932 பேர் குணமடைந்தததாகவும், 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios