கொரோனா தொற்று டிசம்பர் மாதம் 2019 முதல் இடைவிடாது பரவி வருகிறது. தற்போது புது வகையான கொரோனா தொற்று இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை முழுமையாக சரி செய்வதற்காக இன்று வரை வாக்சின் கண்டுபிடிக்கும் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை ஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகிறது.

தன் நாட்டில் வசிக்கின்ற அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துகளை எப்படியாவது அளித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக செயல்பட்டு வருகிறது ஜெர்மனி அரசு. ஜெர்மனியில் சாலை போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் வாழும் மக்களுக்கும் கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை யுஎப்டியாவது அழித்துவிட வேண்டும் என்பதற்காக டிரோன்கள் மூலமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அளித்து அசத்தி வருகிறது ஜெர்மானிய அரசு.