• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தவறான கொரோனா சோதனைகள்-பாதிக்கப்பட்ட மக்கள்

என்.ஹெச்.எஸ் டெஸ்ட் மற்றும் ஆய்வகப் பிழை காரணமாக 1,300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தவறாகக் கூறியுள்ளனர்.





நவம்பர் 19 முதல் 23 வரை இங்கிலாந்து முழுவதும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 1,311 நபர்களுக்கு தவறாக சோதனை செய்யப்பட்டதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. சோதனை இரசாயனங்களில் சிக்கல் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.




டி.எச்.எஸ்.சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: "பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மற்றொரு பரிசோதனையை எடுக்கும்படி கேட்கப்படுகின்றனர். அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தொடர்ந்து சுயமாக தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். "இந்த ஆய்வகப் பிழை மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த முழுமையாக ஆராயப்பட்டு வருகிறது."



சோதனை இரசாயனங்கள் ஏற்படுத்திய சிக்கலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் கோவிட் சோதனைகளை ரத்து செய்தனர். எனினும் மீண்டும் பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத் துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios