
திருச்சியில் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறப்பது தொடர்பாக கடந்த 7-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அவருடன் கலந்துகொண்ட அனைத்து வியாபாரிகளுக்கும் நாளை (15-ம் தேதி) திருச்சி தேவர் ஹாலில் கரோனா பரிசோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.