அறிகுறி தென்படாத நோயாளிகள் மூலமே கொரோனா வைரஸ் பெரிதும் பரவுகிறது. ஒரு அமெரிக்க செயலி செயற்கை நுண்ணறிவின் மாதிரியைப் பயன்படுத்தி உங்கள் இருமலை அளவிட்டு கொரோனா இருமல் அளவிடோடு ஒப்பிடுகிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த செயலி இருமல் முறை பதிவுகளின் மூலம் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு இடையில் வேறுபாட்டை நிர்வகிக்கிறது.
இத்தகைய வேறுபாடுகள் மனித காதுகளால் கேட்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்றாலும், செயற்கை நுண்ணறிவு இந்த வேறுபாடுகளைக் கணித்து அவற்றுக்கு இடையில் வேறுபடுத்துகிறது.
தற்போது, ஸ்மார்ட்போன்களுக்களில் பயனர்கள் சுபலமாய் உபயோகிக்கும் வண்ணம் இந்த செயலி தயார் செய்யபட்டுவருகிறது.
ஆராய்ச்சியாளர்கள் குழு 70,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இருமல் பதிவுகளை இதுவரை சேகரிதுள்ளது.இவை இருமல் ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய தரவுத்தொகுப்பாக இருக்கலாம்.