• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

கொரானா செயலி (App)



கொரோனா தடுப்பிற்கு எவ்வளவு வழிகள் , மேற்கொண்டாலும் குறைந்தபாடில்லை.. இருந்தும் நம் இந்திய மக்களின் முயற்சி நிறுத்தப் படுவதாக தெரியவில்லை.



" ஊரடங்குனால கொரோனா குறஞ்சதோ இல்லையோ, நாளுக்கு நாள் நம்ம கூகுள் ப்ளே ஸ்டோர்-ல ஆப் தான் அதிகமாயிட்டே இருக்கு"


ஆம், கொரோனா காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, சென்னை " மெடி இந்தியா" மருத்துவமனையில் ஜீரண நலத்துறை தலைமை மருத்துவர் சந்திரசேகர் என்பவர், ‘MED – -HAP’ என்ற மொபைல் செயலியை, வடிவமைத்துள்ளார்.


தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிகளிலும் இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த செயலி, தனி மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த, 10 சவால்கள் குறித்து, நினைவூட்டல், கேள்வி – பதில் உள்ளிட்டவைகள் மூலம், வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இதில் உள்ள தனித்துவமான அம்சங்கள், ஏற்கனவே இருக்கும் செயலிகளில் இருந்து வேறுபடுகின்றன.


ஒருவர், தன் சுகாதார நடைமுறைகளை, சுய தணிக்கை செய்வது, எதிர்காலத்தில் தொற்று நோய் பரவாமல் தடுப்பதில், தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு, இந்த செயலி மிகவும் உதவும்,”

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios