• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

கொரோனாவால் எது சேர்ந்ததோ இல்லையோ இது சேர்ந்துவிட்டது!!!

கடந்த ஏழு மாதங்களில் இந்தியா சுமார் 33,000 டன் கோவிட் -19 மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது. மகாராஷ்டிரா அதில் அதிகபட்சமாக (3,587 டன்) பங்களிப்பு செய்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபரில் நாடு முழுவதும் 5,500 டன் கோவிட் -19 கழிவுகள் சேர்ந்துள்ளன.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் 2020 முதல், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 32,994 டன் கோவிட் -19 தொடர்பான உயிரியல் மருத்துவ கழிவுகளை கொடுத்துள்ளன. அவை 198 பொதுவான உயிரியல் கழிவு சுத்திகரிப்பு வசதிகளால் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. கோவிட் -19 பயோமெடிக்கல் கழிவுகளில் பிபிஇ கருவிகள், முகமூடிகள், ஷூ கவர்கள், கையுறைகள், மனித திசுக்கள், இரத்தத்தால் மாசுபட்ட பொருட்கள், உடைகள், பிளாஸ்டர்கள், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் அடங்கும்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios