கொரானா காலகட்டத்தில் பல்வேறு தனியார் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில அரசு துறைகள் தீவிரமாக தனது பணிகளை உயிர் பனையை வைத்து செய்து வருகின்றனர்.
அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நல அமைப்புகள் சென்ற ஜூன் ஒரு மாதத்தில் மட்டும் பெற்றோர்களால் தூக்கி வீசப்பட்ட 4 பச்சிளம் குழந்தைகளை மீட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் ஏற்படுத்தி தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் குழந்தைகள் பெரும்பாலும் துவாக்குடி, ஜீயபுரம், துறையூர், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி போன்ற பகுதிகளிலிருந்து
இதுபோன்று தூக்கி எரியும் நிலைக்கு
தள்ளப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஜீயபுரம் பேருந்து நிலையத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கூறியபோது குழந்தைகள் இது போன்ற நிலைமைகளுக்கு தள்ளப்படுவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது மேலும் குழந்தையை பெற்றோர் தனது விவரங்கள் ஏதும் அளிக்காமல் குழந்தை நலன் கருதி அவர்களை அரசால் உருவாக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் கொண்டு சேர்க்குமாறு கூறினார் மேலும் இது போன்ற பொது வெளிகளில் பச்சிளங்குழந்தைகளை போடுவதன் மூலம் மிருகங்கள் மூலம் உயிர் சேதத்திற்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர் என்றார்...