• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கும் இயற்கை பேரழிவுகள்

வெப்பமண்டல புயல் அயோட்டா மத்திய அமெரிக்காவை நோக்கி வலுவடைந்து வருகிறது.




திங்களன்று நிகரகுவா மற்றும் மிஸ்கிடோ கடற்கரையின் காடுகளை அடித்து நொறுங்கும் அளவுக்கு அயோட்டா வலிமைமிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணி நிலவரப்படி EST (2100 GMT), அயோட்டா அதிகபட்சமாக மணிக்கு 60 மைல் (97 கி.மீ) வேகத்தில் வீசுகிறது, என்று அமெரிக்க தேசிய வானிலை மையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளது.



இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியை ஈட்டா சூறாவளி தாக்கியது. இதனால் வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன. பனாமாவிலிருந்து தெற்கு மெக்ஸிகோ வரை ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.அதில் ஏற்பட்ட அழிவை மத்திய அமெரிக்கா இதுவரை சமாளித்து வருகின்றது.



இச்சமயத்தில் வடக்கு கொலம்பியா மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும் திங்கள்கிழமை முற்பகுதியில் அயோட்டா , வெள்ளம் மற்றும் மண் சரிவுகளை கொண்டு வரக்கூடும் என்று NHC எச்சரிக்கிறது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios