இந்திய சூழலில், வரலாற்றாசிரியர்கள் கட்டிடங்களை புனிதமானதாகக் கருதுகின்றனர், எந்த மாற்றங்களையும் விரும்பவதில்லை; எனினும் டெவலப்பர்கள் / பில்டர்கள் இவற்றை பாதுகாப்பதை ஒரு பெரிய தடையாகக் கருதுகின்றனர். அவர்கள் முழுமையான மாற்றத்தை விரும்புகிறார்கள்; சமூகம் இத்தகைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து அதிகம் அறியாதவர்கள் - அத்தகைய மாற்றம் அவசியம் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்; அரசாங்கம் மேற்கொள்ளும் சில பழங்கால கட்டிட பாதுகாப்பு வழக்குகள் பொதுவாக அழகு சார்ந்த இடங்களாக உள்ளன.

வரலாற்றாசிரியருக்கும் கட்டமைப்பாளருக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவர் தான் பாதுகாவலர். வரலாற்று நகரங்களில் உள்ள கட்டிடங்களுக்கு பராமரிப்பு இல்லை. 1940 களில் இயற்றப்பட்ட வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வாடகைகளை முடக்கியது. இதன் விளைவாக நில உரிமையாளர்கள் தங்கள் கட்டிடங்களை பராமரிக்க முடியாமல் அவற்றை இடிக்க அல்லது மறுவடிவமைப்பு செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இத்தகைய பராம்பரிய கட்டிடங்களை திறமையாக பழுதுபார்ப்பவர்கள் அரிது.