எனது தினசரி இலக்கு பதிவை(to - do- list) ஒரு நண்பரிடம் காட்டினேன். அவர், “ஓ, நீங்கள் அட்டாமிக் ஹாபிட்ஸ் படித்திருக்க வேண்டும், இல்லையா?”என்றார். "இல்லை, நான் அதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை" என்று நான் பதிலளித்தேன். நான் பின்னர் அட்டாமிக் ஹாபிட்ஸ் புத்தகத்தை படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.நான் கடந்த ஒரு வருடமாக சரியாக திட்டமிட்டு வேலைகளை செய்து வந்தேன்,என்கிறார் டானி சாபியோ.நல்ல பழக்கங்களை உருவாக்குவதற்கும் கெட்டவற்றை தவிர்ப்பதற்கும் மட்டுமல்லாமல் என் பழக்கவழக்கங்களுடன் உறுதியாக நிற்பதற்கும் புத்தகம் இன்றியமையாத வழிமுறைகளை வழங்கியது.

இதுவே என்னை 2021க்கான ரெசலுசன்(resolution) செயலியை உருவாக்க தூண்டியது. கொன்ஃபெட்டி(confetti) எனும் செயலி உங்கள் எல்லா பழக்கங்களையும் வடிகட்டி உங்களுக்கேற்ற நல்ல பழக்கங்களை வரிசையிடும். பின் நினைவூட்டும். செய்யக்கூடாத பழக்கங்களைக் கூறும். இதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த தினசரி வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் உங்களுக்கும் உங்கள் குறிக்கோள்களுக்கும் வழிவகுக்கும் பழக்கங்களைக் கொண்டிருக்கலாம்.