2020 மார்ச் மாதம் பிரிட்டனை சேர்ந்த ஜோசப் பிளாவில் என்ற 19 வயதே ஆனா இளைஞர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட கார் விபத்தால் கோமாவிற்கு சேர்ன்றுவிட்டார். 11 மாதங்களுக்கு பிறகு அவர் சுயநினைவை அடைந்தவுடன் அவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
பிரிட்டனில் லாக் டவுன் போடுவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு ஜோசப் கோமாவிற்கு சென்றுவிட்டார். 2020 மார்ச் மாத முதல் ஹாஸ்பிடலில் சிகிசிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சுயநினைவை அடைந்தவுடன் அவரது அம்மா , அப்பா எங்கே? என்று மருத்துவர்களிடம் கேட்டதற்கு கொரோனா காரணமாக பெற்றோர்களுக்கு மருத்துவமனைக்குள் அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.

வாட் இஸ் கொரோனா???
குழம்பி போன இளைஞர் வாட் இஸ் கொரோனா? என்று கேட்டது மருத்துவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 11 மாதம் தன் கோமாவில் இருந்ததை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் உள்ள இளைஞருக்கு, டாக்டர்கள் கொரோனா வைரஸ் பற்றி எடுத்து உரைத்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. எனினும் அந்த இளைஞர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.