
வானவில்: சூரியனோ அல்லது காற்றோ மழைத்துளிகளைத் தாக்கும் போது ஒளிவிலகல் மூலம் வானவில் உருவாக்கப்படுகின்றது. நமக்குப் பின்னால் வானத்தில் சூரியனும் , முன்னால் மழையும் இருக்கும்போது வானவில் தோன்றும். நியூட்டன் காண்பித்த பிரிஸ்ம் ஆராய்ச்சி போல சூரியனில் இருந்து வரும் வெள்ளை ஒளி, மழைத்துளிகளால் பிரதிபலிக்கப்படுகிறது. நீல வானம்: வானத்தின் நீல நிறத்தை லார்ட் ரேலெய் ஆராயந்தார். ஆனால், அவரைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் உள்ள சிறிய துகள்கள் ஒளிச்சிதறலைச் செய்தன. சிறிய துகள்கள் என்பது ஒரு மர்மமாகவே இருந்தது. பிறகு ஒளிச் சிதறலுக்கு காரணமானது காற்றின் மூலக்கூறுகளான ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் தான் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க பல வருடங்களானது . நீல வானத்துடன் ஒப்பிடுகையில், மேகங்கள் வெண்மையாகத் தெரிகின்றன, ஏனெனில் அவை நீர் ஈரப்பதத்தின் மிகப் பெரிய துகள்களைக் கொண்டுள்ளன.

உதயம் மற்றும் அஸ்தமனம்: பகலில் சூரியன் மேல்நோக்கி இருக்கும் போது அதன் ஒளி நேரடியாக வளிமண்டலத்தின் வழியாக நம்மைச் வந்தடைகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தில், சூரியன் அடிவானத்திற்கு அருகில் உள்ளது.அப்போது ஒளி பயணிக்கும் காலமானது பகல் நேரத்தைவிட அதிகம். எனவே வானின் நீல நிறம் மறைக்கப்பட்டு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெரிகின்றது.