ஸ்டுடியோ ரூஸ்கார்ட், 20,000 சதுர மீட்டர் ஒளி விளைநிலத்தை உருவாக்கியுள்ளனர்.இது விவசாயத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வடிவமைப்பாளரான டான் ரூஸ்கார்ட் சிவப்பு, நீலம் மற்றும் புற ஊதா விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளார்.

இந்த திட்டத்திற்கான முதல் யோசனைகள் ஒரு அதிகாலை பண்ணைக்கு வந்த பிறகு வந்துள்ளது. மேலும் இத்தகைய புற ஊதா ஒளி தாவரங்களின் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்துகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது அனைத்து பயிர்களிலும் வேலை செய்கிறது ",என்று வடிவமைப்பாளர் விளக்கினார்." இதன் மூலம் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை நாம் குறைக்க முடியும்.