15 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சுவடி ஒன்றில் எழுத்துகள் மறைக்கப்பட்டிருந்தது. ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இளங்கலை மாணவர்கள் புற ஊதா ஒளி மூலம், அந்த சுவடியில் உள்ள எழுத்துகளை வெளிக்கொண்டு வந்தனர்.

ஆர்.ஐ.டி ஒரு சிறப்பான கல்லூரி ஆகும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து, ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அவர்களின் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதே கல்லூரியின் குறிக்கோளாக இருந்தது. "ஃப்ரெஷ்மேன் அனுபவம்" எனப்படும் ஒரு பாடத்திட்டத்தில் 19 மாணவர்கள் சேர்ந்தனர். இதன் ஒரு பகுதியாக வரலாற்று ஆவணங்களை பகுப்பாய்வு செய்யும் செயலை மாணவர்கள் கையிலேடுத்தனர்.
மார்ச் மாதத்தில் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியது, மேலும் அமெரிக்காவில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே பல்கலைக்கழகமும் அதன் வளாகத்தை மூடியது.இதனை ஈடுசெய்ய, வகுப்பில் உள்ள மாணவர்கள் நான்கு சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு பணியை மேற்கொண்டனர். ஒரு குழு தொழில்நுட்ப கையேட்டை உருவாக்கியது, மற்றொரு குழு இறுதி பயனர் வழிகாட்டியை உருவாக்கியது, மூன்றாவது குழு ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியது, நான்காவது ஒரு பகுதியினர் தங்கள் திட்டத்தைப் பற்றிய வீடியோ ஆவணப்படத்தை தயாரித்தனர்.
மாணவர்கள் நம்பமுடியாத முக்கியமான தகவல்களை வழங்கியுள்ளனர், மேலும் எங்களுக்குத் தெரியாத இரண்டு செய்திகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், ”என்று கேரி கிராஃபிக் ஆர்ட்ஸ் சேகரிப்பின் கண்காணிப்பாளர் ஸ்டீவன் கல்பிரைத் கூறினார்.