கொலோராடோ யூனிவர்சிட்டியில் கையாளப்பட்ட ஆய்வின் மூலம் க்ரோமாடின் திடமானதும் இல்லை திரவமானதும் இல்லை, அது ஒரு ஜெல் போன்றது எனக் கண்டறியப்பட்டது. குரோமோசோம் க்ரோமாடினால் ஆனது. இது பாதி புரதமும் மீதி டி. என். ஏ வும் நிறைந்தது. இவை ஒரு பாசி போல் கோர்க்கப்பட்டு குரோமோசோம் ஆக மாறும்.

இந்த ஆய்வு புற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஹென்ட்செல் என்பவரால் நடத்தப்பட்டது. பல காலமாக ப்யோ கெமிஸ்ட்ரி போன்ற இயல்களில் க்ரோமோடினை திரவம் என்றே நினைத்து வந்தனர் என்று ஹென்ட்செல் கூறினார்.
மேலும் அவர், நமக்கு ஐஸ் மற்றும் நீருக்கு வித்தியாசம் தெரியும். பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும் என்றால் அது நீராக இருக்க முடியாது . அதற்கு பலம் தரும் வகையில் ஏதாவது வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான் ஆய்வை மேற்கொண்டதாக கூறினார்.