வசந்த காலம் என்பது அனைவருக்கும் பிடித்தமான காலம் என்றே சொல்லலாம். இந்த காலத்தில் புதுவிதமான பறவைகள் இடம்பெயர்வும், மிதமான வெயிலுடன் கூடிய இளம் பனிபொழிவும் காணப்படும் காலம் இது. இந்த வசந்த காலம் இங்கிலிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சீனாவில் இந்த வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மிக சிறப்பான திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக கடலுக்கு அடியில் சிங்க நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடனம் கடலுக்கு அடியில் 10 மீட்டர் ஆழத்திற்குள் சென்று நடைபெறும் என்பதால் நடனக்கலைஞர்கள் 10 மீட்டர் ஆழத்திற்குள் சென்று அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.