இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்று தான் இலங்கை. இங்கு சீனர்கள் அவர்கள் நாட்டில் தயாரிக்கும் பொருட்களை அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் இல்லாமலேயே போய்விட்டது. இலங்கை நாட்டு மக்களின் பொருளாதாரமும் பின்தங்கி சென்றுகொண்டிருக்கிறது.

இலங்கையில் வலுவாக வந்து உட்காருவதற்கு சீனர்கள் திட்டமிட்டு வரும் இந்த சூழ்நிலையில் சீனாவால் தயார் செய்யப்பட்ட ரயில்களை இலங்கை நாட்டு ரயில் ஓட்டுனர்கள் ஓட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு எதிர்ப்பு சீனாவின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமாறு அமைந்துள்ளது.
சீன ரயிலில் அப்படி என்னதான் குறை இருக்கு??
பிரேக்குகள் சரியாக செயல்படவில்லை, அதனால் ஒரு இடத்தில் பிரேக் போட்டால் சில தூரங்கள் கடந்து சென்று தான் ரயில் நிற்கிறது.மேலும் இது பயணிகளின் பாதுகாப்பிற்கு உகந்ததாக இல்லை. இதுவரை 200 விபத்துக்கள் சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்களால் ஏற்பட்டுள்ளன.
குறைகளை தீர்!!!
இத்தகைய குறைகளை எல்லாம் தீர்த்தால் மட்டுமே இலங்கையில் ரயில் வண்டிகள் இயக்கப்படும். இல்லையெனில் அதுவரை இலங்கையில் ரயில் வண்டிகள் இயக்கப்பட மாட்டாது என்று இலங்கையில் ரயில் வண்டியை இயக்குகின்ற டிரைவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.