அழகு என்பது இன்று அனைவரிடமும் கவர்ச்சியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகு என்பதை மறந்த மனிதர்களுள் பலர் தன்னை அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதில் ஒன்று தான் பியூட்டி பார்லர் செல்வது. இதன் அடுத்த கட்டமாக நடிகர், நடிகைகளில் பலர் தன்னை அழகாக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்கிற நிகழ்வும் நடந்து தான் வருகிறது.
சீன நடிகை ஒருவர் தன்னை அழகாக மாற்றி கொள்வதற்காக மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.எதிர்பாராத விதமாக அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் சீன இளம் நடிகையின் மூக்கில் சரி செய்ய முடியாத காயம் ஏற்பட்டு விட்டது.பல நேரங்களில் நாம் செய்யும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை போன்ற முயற்சிகள் வெற்றியை கொடுத்தாலும் கூட சில நேரங்களில் பெரிய விபத்தில் முடிந்து விடுகிறது என்று கடினமாக அறிவுறுத்தி உள்ளார் சீன இளம் நடிகை

அழகாக இருந்த என்னுடைய மூக்கை இன்னும் அழகாக்க வேண்டும் என்ற என்னுடைய முயற்சி, தோல்வியில் முடிந்ததால் என் மூக்கில் சரிசெய்ய முடியாத காயம் ஏற்பட்டுள்ளது. என்னை போல் யாரும் அறுவை சிகிச்சை செய்து இயற்கையாக அமைந்த அழகை கெடுத்து கொள்ளாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் சீனாவை சேர்ந்த இளம் நடிகை.