நாயை செல்ல பிராணியாக வளர்ப்பது இன்றைய காலக்கட்டத்தில் சாதாரணாமாக மாறிவிட்டது. நாயை போல் நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற பழமொழியும் காலங்காலமாக சொல்லப்பட்டு தான் வருகிறது. இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி என்ற மாகாணத்தில் இருக்கின்ற விலங்குகள் காப்பகத்தில் இருந்து சேடி என்ற நாயை பிரையன் தத்தெடுத்துள்ளார். சேடி என்ற நாயின் உரிமையாளர் வேறு மாகாணத்திற்கு இடம் பெயர்ந்ததால் சேடியை காப்பகத்தில் விட்டுள்ளார். உரிமையாளரின் பிரிவினால் வாடிய சேடி பிரையன் தன்னை தத்தெடுக்கவும் அவர் மீது அதீத அன்பு காட்டியது.

ஒரு நாள் இரவு பிரையனிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டதை பார்த்த சேடி அவருக்கு ஏதோ உடம்பு சரிஇல்லை என்பதை உணர்ந்து கொண்டு அவர் மயங்கி விட கூடாது என்பதற்காக தன்னுடைய நாவினால் அவரது முகத்தை தடவிக் கொண்டே இருந்தது. மேலும் அவரது சட்டையை பிடித்து போன் இருக்கும் இடத்திற்கு இழுத்து கொண்டு வந்தது.அவரே அம்புலன்ஸிற்கு போன் செய்தார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். ஹாஸ்பிடலில் உள்ள பிரயனை வீடியோ காலில் தினமும் பார்த்து பேசி வருகிறது சேடி.ன் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.