• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

சாந்து பௌரி : மகத்தான அமைப்பு

முன்னுரை


இந்தியா பல நம்பமுடியாத பண்டைய கட்டிடக்கலைகளின் தாயகமாகும். அத்தகைய ஒரு அற்புதம்தான் சாந்து பௌரி (Chaand Bowri). ராஜஸ்தானின் தவுசா மாவட்டமான பாங்கிட்குய் அருகே அபானேரி கிராமத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கிணறு. ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 100 கி.மீ உள்ளது. அபானேரிக்கு முதலில் ‘அபாநக்ரி’என்று பெயரிடப்பட்டது. அதற்க்கு ‘பிரகாசத்தின் நகரம்’ என்பதன் பொருளாகும். இப்பாரம்பரியம் தற்பொழுது இடிபாடுகளாக மாறிக்கொண்டுவந்தாலும், இன்னும் உலகம் முழுவதிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத்தான் செய்கிறது.வரலாறு பின்னணி


நிகும்ப வம்சத்தை சேர்ந்த மன்னர் சாந்தா 8 - 9 ஆம் நூற்றாண்டின் அபானேரியை ஆட்சி செய்து வந்தார். சாந்து பௌரி என்ற பெயர் அவரது பெயரையொட்டி பெயரிடப்பட்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1200-1300 ஆண்டுகள் பழமையானது. அருகில் ஹர்ஷத் மாதா கோவில் உள்ளது. இக்கோயிலும் அதே மன்னரால் கட்டப்பட்டது. இது கடுமையான வெப்ப காலங்களில் உள்ளூர்வாசி மற்றும் ராயல்களுக்கான சமூக சுற்றுச்சூழல் இடமாக அமைந்து வந்ததது. கிணற்றின் ஒரு பக்கத்தில் ராயல்களுக்கு ஒரு ஓய்வு அறை உள்ளது. ராஜஸ்தான் மிகவும் வறண்ட பூமி மற்றும் கடுமையான நீர் பற்றாக்குறை பகுதி என்பதால், இப்பிரச்சனைக்கு தீர்வுகாண உள்ளூர் மக்கள் 30 மீட்டர் வரை ஆழமான கிணறு தோண்டத்துவங்கின. மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவதற்கும் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட விளைவுதான் சாந்து பௌரி கட்டப்பட்டது. இது ஒரு நடைமுறை நீர் மேலாண்மை தீர்வு. இது கோடை மாதங்களில் இயற்கை குளிராகவும் செயல்படுகிறது.
கட்டமைப்பு அமைப்பு


சாந்து பவ்ரி ஒரு செவ்வக முற்றத்தின் வகையான அமைப்பையும் துல்லியமான வடிவியல் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது 13 அடுக்குகள் கொண்ட கட்டிடமாகும். சுமார் 30 மீ (100 அடி) மற்றும் 3,500 குறுகிய படிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நுழைந்ததும் ஜாரோகாவை (ஜன்னல்கள்) காணலாம். தொழில்நுட்பமில்லாத அக்காலத்தில் இவ்வகையான கட்டுமானத்தைக் பார்ப்பதே கடினம். தளத்திற்கு மேல் ஒரு அரண்மனை கட்டிடம் சேர்க்கப்பட்டது. இது சவுகான் மற்றும் முகலாய ஆட்சியாளர்கள் பயன்படுத்திய அட்டவணைப்படுத்தப்பட்ட வில்வளைவுகளை காணலாம். இந்த அறைகளுக்கான அணுகல் இப்போது சுற்றுலாப்பயணிகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் முகலாய அவர்களின் காலத்தில் ஆர்கேட் (மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதை) கட்டப்பட்டன. முகலாயர்கள் கலைக்கூடங்களையும், கிணற்றைச் சுற்றியுள்ள ஒரு சுவரையும் சேர்த்தனர். இக்கிணறு நான்கு பக்கம் கொண்டது. இக்கிணற்றின் அடிப்படை கட்டடக்கலை அம்சங்கள் தரை மட்டத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு கதைகளுக்கு இட்டுச்செல்லும் படிகளின் நீண்ட தாழ்வாரத்தைக் கொண்டிருக்கின்றன. கிணற்றின் அடிப்பகுதி மேற்பரப்பை விட 5-6 டிகிரி குளிராக உள்ளது. மூன்று பக்கங்களிலிலுள்ள படிக்கட்டுகள் தண்ணீரைச் சுற்றியுள்ளன. நான்காவது பக்கத்தில் அழகான செதுக்கப்பட்ட ஜரோக்காக்கள், தூண்களில் ஆதரிக்கப்படும் காட்சியகங்கள் மற்றும் சிற்பங்களை உள்ளடக்கிய இரண்டு திட்ட பால்கனிகளுடன் மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு பெவிலியன் உள்ளது


.


அழிவின் காரணி


இந்த நீர் மேலாண்மை முறை ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்றால் அதே தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதற்கும், கழுவுவதற்கும், குளிப்பதற்கும் உபயோகித்ததுதான். அவர்களுக்கு இது ஜீரணிக்க மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் குழாய்களின் முறையை அறிமுகப்படுத்தினர். இது வறண்டு போவதற்கு வழிவகுத்ததுமட்டும்மல்லாமல் ஒரு பண்டைய வாழ்க்கை முறையின் சீரழிவுக்கு காரணமாகவும் அமைந்ததது.


திரைப்பட படப்பிடிப்புகள்


பூமி, தி ஃபால், பூல் பூலையா, பஹேலி போன்ற பல படங்களுக்கான படப்பிடிப்பு இடமாக சாந்து பௌரி பயன்படுத்தப்பட்டது. மேலும் 2012 ஆம் ஆண்டில் தி டார்க் நைட் ரைசஸ் என்ற பட்டத்தில் கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


லுப்னா சுரையா

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios