மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (வி.பி.என்) ,மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஒரு சதுர மீட்டரில் அதிக சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் ஒரு சதுர மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து ஹைதராபாத் சதுர மீட்டருக்கு 480 ஆகும். இருப்பினும், ஹைதராபாத் (3 லட்சம்), பெய்ஜிங் (10.1 லட்சம்) மற்றும் லண்டன் (6.6 லட்சம்) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமாக சென்னையில் 2.8 லட்சம் சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், சி.சி.டி.விகள் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக்கு உதவுகின்றன. சி.சி.டி.வி கேமராக்களை வழங்குவதன் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்பு செயல்பாட்டில் ஈடுபட ஊக்குவிக்கிறோம், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.