இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்), இந்தூர் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான iimcat.ac.in இல் கேட் (CAT) 2020க்கான மாதிரி தேர்வை வெளிட்டுள்ளது. ஐ.ஐ.எம்-கேட் 2020 க்கு ஏற்கனவே பதிவுசெய்த வேட்பாளர்கள் பரீட்சை முறை, கால அளவு மற்றும் ஆன்லைனில் பதிலளிக்கும் நடைமுறை குறித்த யோசனையைப் பெறலாம். கேட் 2020 நவம்பர் 29 அன்று நடைபெற இருக்கின்றது.

வேட்பாளர்களைப் பழக்கப்படுத்தும் நோக்கத்துடன் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இந்த மாதிரி வினாத்தாளில் உள்ளது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முறையின் அடிப்படையில் பி.டபிள்யூ.டி அல்லாத வேட்பாளருக்கு மூன்று பிரிவுகளுக்கு தலா 40 நிமிடங்கள் என,மாதிரி தேர்வுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் 120 நிமிடங்கள் ஆகும். "இந்த மாதிரி தேர்வுக்கான நோக்கம் கேட் 2020 க்கான தேர்வு முறையை வெளிப்படுத்துவதல்ல, உண்மையான தேர்வு மாறுபட்டு இருக்கலாம் என்று அறிவிப்பு மேலும் கூறுகிறது. கேட் 2020 மூன்று அமர்வுகளில் நடைபெறும்: அதாவது வாய்மொழி திறன் மற்றும் வாசிப்பு புரிதல், தரவு விளக்கம் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் அளவு திறன். ஒவ்வொரு பிரிவிலும் பதிலளிக்க வேட்பாளர்கள் 40 நிமிடங்கள் பெறுவார்கள், ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.