கலை மற்றும் பொறியியல் ஒன்றாக எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்து உள்ளீர்களா? கார்டிஸ்ட் ஃபெஸ்டிவல் அதை நம் கண்முன் கொண்டு வருகிறது. இது ஒரு நான்கு நாள் திருவிழாவாகும்.
இது ஆட்டோமொபைல்கள் மற்றும் கலைகளை ஒன்றிணைக்கிறது.

கார்டிஸ்ட் என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.அங்கு கலை நான்கு சுவர்களுக்குள் அடங்காது என்று இதன் அமைப்பாளரான ஹிமான்ஷு ஜாங்கிட் விவரிக்கிறார்.
"2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், நாங்கள் கார்டிஸ்ட் யாத்திரை செய்தோம். அதாவது எங்கள் கலை கார்களில் வெவ்வேறு நகரங்களுக்குச் சென்றோம்,என்று ஜாங்கிட் கூறுகிறார்.
இந்த ஆண்டு, கார்ட்டிஸ்ட் விழா 2020 என்பது நிலைத்தன்மை என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இது நாடு முழுவதிலுமிருந்து உள்ள மக்களின் ஆதரவோடு பெரியதாகவும் சிறப்பானதாகவும் நடக்கும் ”என்று ஜாங்கிட் கூறுகிறார்.