புற்றுநோயை அழிப்பதற்கு ஒரு புதிய வழி மிசோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, உங்கள் உடலின் நோயெதிர்ப்பு செல்கள் உடலில் உள்ள வெளி செல்களை அடையாளம் கண்டு அழிக்க தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடும், என்று உயிரியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியர் யவ்ஸ் சாபு கூறினார்.

புரியும்படி விளக்க வேண்டுமானால், சாதாரண உடல் செல்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் ரோந்து வரும் போது 'என்னை சாப்பிட வேண்டாம்-' என்ற கொடியை வைக்கின்றன. இதனால் சாதாரண திசுக்கள் அழிவிலிருந்து தப்பிக்கிறது. ஆனால் சில புற்றுநோய்கள் சாதாரண உடல் செல்களைப் பிரதிபலிக்கும் திறனையும் உருவாக்கி இந்த 'என்னை சாப்பிட வேண்டாம்' கொடியை உயர்த்துகின்றன. இதன் விளைவாக, நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை கண்டு கொள்ளாமல் அதை தனியாக விட்டுவிடுகிறது. இது நோயாளிக்கு மோசமான செய்தியாகும், "என்று சாபு கூறினார். நோயெதிர்ப்பு சிகிச்சைகள் இந்த போலி பிரதிபலிப்பு தடுத்து புற்றுநோய் செல்களை கொல்ல அனுமதிக்கின்றன.