பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை உடல் பருமனாக உள்ளவர்களுக்கு
நடத்தப்படும் அறுவைசிகிச்சையாகும்.
பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அழகு சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு இன்று வரை வரி உள்ளது.இந்த வகையில் பேரியாட்ரிக் சிகிச்சைக்கும் இது வரை வரி இருந்து வந்தது.
இந்தூரைச் சேர்ந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோஹித் பண்டாரி, தனக்கு விதிக்கப்பட்ட சேவை வரிக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அழகு சம்ப்பந்தபட்டது இல்லை என்றும் அது ஒரு உயிர்காக்கும் செயல் என்றும் கூறினார்.

அவரது முறையீட்டின் ஒரு பகுதியாக, டாக்டர் மோஹித் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளை முன்வைத்தார். எடை இழப்பு அறுவை சிகிச்சையும் ஒப்பனை அறுவை சிகிச்சையும் வேறு வேறு என்றார். " 95 சதவீத நோயாளிகள் டைப் 2 நீரிழிவு நோயால்
இந்த அறுவை சிகிச்சை செய்கின்றனர்.மேலும் 80 சதவீதபேர் மூட்டு வலியாலும்,98 சதவீத பேர் மூச்சுத்திணறலாலும் மற்றும் 96 சதவீதத்தில் கொழுப்பு
கோளாறுகளாலும் இந்த அறுவை சிகிச்சை செய்கின்றனர்", என்றார்.
இதனை தொடர்ந்து மும்பை நீதிமன்றம் இனி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு சேவை வரி விதிக்க முடியாது, ஏனெனில் இது ஒரு உயிர் காக்கும் நடைமுறை மற்றும் ஒப்பனை அல்ல என்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.