நவம்பரில், கலிஃபோர்னியர்கள் முன்மொழிவு 24 ஐ நிறைவேற்றக்கோரி வாக்களித்தனர். இது வணிகங்களுக்கு தரவு சேகரிப்பதில் புதிய விதிமுறைகளை விதிக்கிறது. கலிஃபோர்னியா தனியுரிமை உரிமைகள் சட்டத்தின் (சிபிஆர்ஏ) ஒரு பகுதியாக, தனிநபர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதிலிருந்தும் விற்பதிலிருந்தும் விலகுவதற்கான உரிமையை இப்போது பெறுவார்கள். அதே நேரத்தில் நிறுவனங்கள் பயனர் தனியுரிமையைப் பாதுகாக்க தரவு சேகரிப்பை “நியாயமான முறையில்” குறைக்க வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.

ஆப்பிள், பேஸ்புக், உபெர் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளன. இந்த புதிய சட்டம் அவற்றின் தற்போதைய தரவு சேகரிப்பு திறன்களைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றலாம். எனினும், இச்சட்டத்தின் விளைவாக, நுகர்வோர் சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பெறுகிறார்கள். அதே நேரத்தில் வணிகங்களும் கீழ்க்கண்டவற்றிலிருந்து பயனடைகின்றன: 1.சிறந்த, துல்லியமான தரவு சரிபார்ப்புடன் குறைக்கப்பட்ட மோசடி. 2.நேர சேமிப்பு 3.குறைக்கப்பட்ட செலவுகள் (இதற்கு பொதுவாக பெரிய வங்கிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் + செலவாகும்). 4.சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்கள்.