பைஜுஸ் அதன் கற்றல் திட்டங்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது 4-10 வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்குக் தமிழில் கற்றல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் கணிதத்தையும் அறிவியலையும் திறம்பட கற்க உதவுவதிலும், தமிழ்நாட்டின் சொந்த மொழியில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு கற்றலைத் தடையின்றி செய்வதிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
BYJU’S ஏற்கனவே 70 மில்லியன் பதிவுசெய்த பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும் தமிழில் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களை சென்றடையும், என்று நம்புகிறது. நிறுவனம் பிற பிரபலமான பிராந்திய மொழிகளில் கற்றல் திட்டங்களை எதிர்வரும் மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.