
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) வெளியிட்டுள்ள சமீபத்திய திருத்தப்பட்ட கல்வி நாட்காட்டியில் வகுப்புகள் தொடங்குவது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) புதன்கிழமை நடைப்பெற்றது. அதில் 2020-21 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பொறியியல் படிப்புகள் டிசம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டது.
"நாட்டில் நீண்டகாலமாக உள்ள நிலைமைகள் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகள், ஐ.ஐ.டி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்), என்.ஐ.டி.எஸ் (தேசிய தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றில் சேர்க்கை காரணமாக, முதலாம் ஆண்டு பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
AICTE ஒப்புதல் அளித்த நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கோவிட் அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு பரீட்சைகளுக்கான நெறிமுறைகளை பின்பற்ற ஆணையிட்டுள்ளது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையிலோ இரண்டும் கலந்தோ நடைபெறலாம்.
பின்னர் பிடெக் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 15 வரை தொடங்காது என்று கூறியது.