பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். ஐக்கிய இராச்சியம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இந்தியா விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் ஏற்றுக்கொண்டார், இது ஒரு பெரிய மரியாதை, ”என்று வெளியுறவு செயலாளர் ராப் கூறினார். இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் ஜான்சன் கலந்துகொள்வது இந்தியா-இங்கிலாந்து உறவில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று ஜெய்சங்கர் கூறினார். 1993 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடைசி பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
