சமீபத்தில், டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் இந்தியாவின் முதல் விலங்கு பாலங்கள் பற்றிய செய்தி நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவர்ந்தது. இப்போது, உத்தரகண்ட் வனத்துறை ஒரு தனித்துவமான சூழல் நட்பு பாலத்தை கட்டி உள்ளது. இது ஊர்வனவற்றிக்கு காட்டு சாலையை பாதுகாப்பாக கடக்க உதவும்.

நானிடல் மாவட்டத்தின் ராம்நகர் வனப் பிரிவில் கட்டப்பட்ட 90 அடி நீளமுள்ள பாலம் -மூங்கில், சணல் மற்றும் புல் ஆகியவற்றால் ஆனது. ஊர்வன, சிறிய விலங்குகள் மற்றும் சிறுத்தைகள் கூட வாகனங்களில் பாதிக்கப்படாமல் காட்டுச் சாலையைக் கடக்கலாம்.
இந்த பாலம் கலதுங்கி-நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே வெறும் 10 நாட்களில் கட்டப்பட்டது. இதற்கு 2 லட்சம் செலவானது என்று அறிக்கை கூறுகிறது. இந்த பாலம் 90 அடி நீளமும், 5 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டது. இது மூன்று மனிதர்களின் எடையைத் தாங்கும் பலம் கொண்டது. இந்த பாலத்தில் சிறிய விலங்குகளை ஈர்க்கவும் பாதுகாக்கவும் புல் மற்றும் இலைகள் அடுக்கியிருக்கும். செல்ஃபிகள் எடுப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்த வன ஊழியர்கள் இப்பகுதியில் ரோந்து செல்வார்கள்.