தன்னை மதிக்காத ஒரு ஆணுடன் வாழும்படி அவளை கட்டாயப்படுத்த முடியாது என்று மணமகளின் தந்தை கூறினார். வெள்ளிக்கிழமை திருமணம் குறிக்கப்பட்டு இருந்தவாறு நடைபெற இருந்தது. அன்று அனைத்தும் சரியாகத் தெரிந்தன.ஆனால் மணமகனின் நண்பர்கள் சிலர் மணமகளை நடன தளத்திற்கு இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகளின் குடும்பமும் மணமகனின் குடும்பத்திற்கு எதிராக வரதட்சணை புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் இரு தரப்பினரும் பின்னர் ஒரு தீர்வுக்கு வந்தனர். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்திடம் ரூ .6.5 லட்சம் கேட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, மணமகனின் குடும்பம் மீண்டும் திருமணத்தை ஒரு எளிய விழாவாக ஏற்பாடு செய்ய முயற்சித்தனர். ஆனால் மணமகள் தன் மீது நடத்தப்பட்ட "தவறான நடத்தை" காரணமாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.