முற்றிலுமாக பார்வை இழந்த ஒருவருக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பார்வையை மீட்டெடுப்பது (இன்னும்) சாத்தியமில்லை என்றாலும், தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி கொண்டே தான் வருகிறது. மூளை உள்வைப்பைப் (implantation) பயன்படுத்துவதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் பார்வையற்றோருக்கு ஒரு அடிப்படை வடிவ பார்வையை மீட்டெடுத்துள்ளனர். மனித மூளையில் பார்வைப் பகுதியில் மின்முனையை உள்வைப்பதன் மூலம், மூளை செயற்கையாக வடிவங்களை அடையாளம் காண்கிறது. மூளையின் காட்சி பகுதி பெருமூளையில் உள்ளது. இந்த பகுதி கண்ணோடு நேரடியாக விஷுவல் அசோசியேஷன் கார்டெக்ஸ் நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு மின் தூண்டுதல் பொருத்தப்பட்ட மின்முனை மூளைக்குள் செலுத்தப்படுவதால், ஒளியின் உணர்வை உருவாகிறது. இந்த உணர்வு, காட்சி பகுதியில் 'பாஸ்பீன்'என்ற குறிப்பிட்ட இருப்பிடத்தில் தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்கு உடம்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்தது.