காலநிலை மாற்றம் காரணமாக தென் அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி படிப்படியாக ஒரு அமீபாவின் தாக்குதல் நடந்து வருகிறது. நெய்க்லீரியா ஃபோலெரி என்ற கொடிய மூளை உண்ணும் அமீபா சமீபத்திய அறிக்கையின்படி பரவலாக காணப்படுகிறது. ஏரிகள் மற்றும் நீரோடைகளில் இது வாழ்கின்றது.

ஒரு நபர் அமீபா வசிக்கும் நீரில் நீச்சல் அல்லது டைவிங் செய்தால் அந்த அமீபா அவர் மூக்கிலிருந்து மூளைக்கு செல்கிறது. இது அமெபிக் மெனிங்கோயென்ஸ்ஃபாலிடிஸ் (பிஏஎம்) என அழைக்கப்படும் அதிர்ச்சியூட்டும் மூளை தாக்குதலை ஏற்படுத்துகிறது.