• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிடைத்த புத்தகம்


மெக்ஸிகோவில் ஒரு பெண்ணுக்கு தனது வீட்டில் இருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒன்றான உயர்நிலைப் பள்ளி ஆண்டு புத்தகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்துள்ளது.



ரியோ கிராண்டே உயர்நிலைப் பள்ளியின் ஆசிரிய உறுப்பினர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தங்களுக்கு 2006ம் ஆண்டு புத்தகம் ஒன்று அஞ்சலில் கிடைத்ததாகவும் அத்துடன் ஒரு குறிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அந்த குறிப்பில் தனது வீட்டு முன்பக்கத்தில் இந்த புத்தகம் கிடைத்ததாக ஒரு பெண் மணி எழுதியிருந்தார்.


பள்ளியின் செயல்பாட்டு இயக்குநரான லெஸ்லி ஜாக்சன் புத்தகத்தில் உள்ள கையெழுத்தைக் கொண்டு அதன் உரிமையாளரை கண்டு பிடித்தார். 2006ம் ஆண்டு புத்தகத்தின் உரிமையாளர் அனலிசா பிரில் என அடையாளம் கண்டார். இதனை அடுத்து பிரல்லை சந்தித்தப்போது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் இருந்து திருடப்பட்ட பல உடைமைகளில் இந்த புத்தகமும் ஒன்று என வியந்தார்.


தனது புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி பேஸ்புக் செய்தி கிடைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக பிரில் கூறினார். மேலும் இது உணர்ச்சிபூர்வமாக மதிப்புடையது என்று அவர் கூறினார். உலகில் வினோதமான விஷயங்கள் நடக்கலாம், ஏனெனில் உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்,என்றார் பிரில்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios