கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட ஜலாராணி என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய ராட்சத படகு வீடு பரணிக்கடவு என்ற ஆற்றில் இயக்கப்படுகிறது. 6 படகு ஓட்டுனர்கள் கொண்ட குழுவின் தொடர் செயல்பாட்டால் இந்த படகு வீடு உருவாக்கப்பட்டது.

100அடி நீளம் மற்றும் 18 அடி அகலத்துடன் கூடிய இந்த பிரம்மாண்டமான படகு வீடு ஒரு கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.நன்மை சுற்றுலா கிளப்பின் முயற்சியால் கட்டப்பட்ட இந்த படகு வீட்டில் 96 பேர் வரை அமர முடியும்.தட்டையான அடிப்பகுதியுடன் கூடிய இந்த படகு வீடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது.