ஒரு விலங்கு சம்பந்தப்பட்ட கதை என்றால் அனைவருக்கும் விருப்பமானது. ஒரு மனிதன் தனது தோழியிடம் ஒரு காக்டூவின்( பெரிய கொண்டை வைத்த ஆஸ்திரேலியா கிளி) உதவியுடன் தன் காதலை தெரிவித்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியா மிருகக்காட்சிசாலையில் நடந்தது. வீடியோவில், ஒரு மிருகக்காட்சிசாலையின் பயிற்சியாளர் கேலரியில் அமர்ந்திருக்கும் விருந்தினர்களுக்கு சிவப்பு வால் கொண்ட கருப்பு காக்டூவை காண்பித்தார். அதன் பெயர் யூலி என்று கூறிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் அந்த கிளி பறந்து சென்று அந்த பெண்ணிடம் கடித்தத்தை கொடுத்தது. பறவையால் மனம் இணைந்த ஜெசி மற்றும் எரின் ஆகியோரை வலைத்தளங்கள் வாழ்த்துகின்றது.
