
நம்முடைய கைப்பேசி, கீழே விழுந்தாலே உடைந்து விடும் என்ற அச்சத்தோடு பார்த்து பாத்து பாதுகாத்த நாம் இனிமேல் அந்த அச்சம் தேவை இல்லை.
ஆம், இதோ வந்துவிட்டது, வளையும் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்.
"Think Hard ; Work Smart" என்று பலர் கூற கேள்வி பட்ட நாம், இன்று நம் தொழில்நுட்பங்களும் புத்திசாலித்தனமாக யோசிக்க ஆரம்பித்த விட்டன என்று தன கூற வேண்டும்.
இனி உலகம் நம் கையில் என்று கூறாதீர்கள் மக்களே, ஸ்மார்ட் உலகம் நம் கையில் என்று கூறுங்கள்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து ஒவ்வொரு முறையும் மேம்படுத்தப்பட்ட திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்மார்ட் உலகின் ஜாம்பவன் நிறுவனமான சாம்சங்.
அந்த வகையில் தற்போத பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், வைபை அலையன்ஸ் (Wi-Fi Alliance) சான்று பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது..